Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௫

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ   ( الملك: ٥ )

And certainly
وَلَقَدْ
திட்டவட்டமாக
We have beautified
زَيَّنَّا
அலங்கரித்தோம்
the heaven nearest
ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا
வானத்தை/கீழ்
with lamps
بِمَصَٰبِيحَ
விளக்குகளால்
and We have made them
وَجَعَلْنَٰهَا
இன்னும் அவற்றை ஏற்படுத்தினோம்
(as) missiles
رُجُومًا
எறிவதற்காக
for the devils
لِّلشَّيَٰطِينِۖ
ஷைத்தான்களை
and We have prepared
وَأَعْتَدْنَا
இன்னும் தயார் செய்துள்ளோம்
for them
لَهُمْ
அவர்களுக்கு
punishment (of) the Blaze
عَذَابَ ٱلسَّعِيرِ
கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை

Wa laqad zaiyannas samaaa'ad dunyaa bimasaa beeha wa ja'alnaahaa rujoomal lish shayaateeni wa a'tadnaa lahum 'azaabas sa'eer (al-Mulk 67:5)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ள வர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். அன்றி, அவைகளை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். (இதையன்றி) அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

English Sahih:

And We have certainly beautified the nearest heaven with lamps [i.e., stars] and have made [from] them what is thrown at the devils and have prepared for them the punishment of the Blaze. ([67] Al-Mulk : 5)

1 Jan Trust Foundation

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.