(அன்றி,) "நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆதலால் (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை" (என்றும் கூறினார்.)
English Sahih:
[Who is] obligated not to say about Allah except the truth. I have come to you with clear evidence from your Lord, so send with me the Children of Israel." ([7] Al-A'raf : 105)
1 Jan Trust Foundation
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமலிருப்பதற்கு (நான்) பேராசை உள்ளவன். உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை திட்டமாக உங்களிடம் கொண்டு வந்துவிட்டேன். ஆகவே, இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை.” (என்றும் மூஸா கூறினார்.)