Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௭

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَۗ قَالَ سَنُقَتِّلُ اَبْنَاۤءَهُمْ وَنَسْتَحْيٖ نِسَاۤءَهُمْۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ  ( الأعراف: ١٢٧ )

And said
وَقَالَ
கூறினார்(கள்)
the chiefs
ٱلْمَلَأُ
தலைவர்கள்
of (the) people
مِن قَوْمِ
சமுதாயத்திலிருந்து
(of) Firaun
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
"Will you leave Musa
أَتَذَرُ مُوسَىٰ
நீ விட்டுவிடப்போகிறாயா? / மூஸாவை
and his people
وَقَوْمَهُۥ
இன்னும் அவருடைய சமுதாயத்தை
so that they cause corruption
لِيُفْسِدُوا۟
அவர்கள் விஷமம் செய்வதற்கு
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
and forsake you
وَيَذَرَكَ
இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை
and your gods?"
وَءَالِهَتَكَۚ
இன்னும் உன் தெய்வங்களை
He said
قَالَ
கூறினான்
"We will kill
سَنُقَتِّلُ
கொன்று குவிப்போம்
their sons
أَبْنَآءَهُمْ
ஆண் பிள்ளைகளை அவர்களுடைய
and we will let live
وَنَسْتَحْىِۦ
இன்னும் வாழவிடுவோம்
their women
نِسَآءَهُمْ
அவர்களுடைய பெண் (பிள்ளை)களை
and indeed we
وَإِنَّا
நிச்சயமாக நாம்
over them
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
(are) subjugators"
قَٰهِرُونَ
ஆதிக்கம் வகிப்பவர்கள்

Wa qaalal mala-u min qawmi Fir'awna atazaru Moosaa wa qawmahoo liyufsidoo fil ardi wa yazaraka wa aalihatak; qaala sanuqattilu abnaaa 'ahum wa nastahyee nisaaa'ahum wa innaa fawqahum qaahiroon (al-ʾAʿrāf 7:127)

Abdul Hameed Baqavi:

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)" என்று கூறினான்.

English Sahih:

And the eminent among the people of Pharaoh said, "Will you leave Moses and his people to cause corruption in the land and abandon you and your gods?" [Pharaoh] said, "We will kill their sons and keep their women alive; and indeed, we are subjugators over them." ([7] Al-A'raf : 127)

1 Jan Trust Foundation

அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.