Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௩

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْۗ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ   ( التوبة: ١٠٣ )

Take from
خُذْ مِنْ
எடுப்பீராக/இருந்து
their wealth
أَمْوَٰلِهِمْ
செல்வங்கள்/அவர்களுடைய
a charity
صَدَقَةً
தர்மத்தை
purifying them
تُطَهِّرُهُمْ
நீர் சுத்தப்படுத்துவீர் அவர்களை
and cause them increase by it
وَتُزَكِّيهِم بِهَا
இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்
and bless
وَصَلِّ
இன்னும் பிரார்த்திப்பீராக
[upon] them
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
Indeed your blessings
إِنَّ صَلَوٰتَكَ
நிச்சயமாக உம் பிரார்த்தனை
(are a) reassurance
سَكَنٌ
நிம்மதி தரக்கூடியது
for them
لَّهُمْۗ
அவர்களுக்கு
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Hearer
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Khuz min amwaalihim sadaqtan tutahhiruhum wa tuzakkeehim bihaa wa salli 'alaihim inna salaataka sakanul lahum; wallaahu Samee'un 'Aleem (at-Tawbah 9:103)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Take, [O Muhammad], from their wealth a charity by which you purify them and cause them increase, and invoke [Allah's blessings] upon them. Indeed, your invocations are reassurance for them. And Allah is Hearing and Knowing. ([9] At-Tawbah : 103)

1 Jan Trust Foundation

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.