Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௦

اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْۗ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۗذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ   ( التوبة: ٨٠ )

Ask forgiveness
ٱسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத்தேடுவீராக
for them
لَهُمْ
அவர்களுக்காக
or
أَوْ
அல்லது
(do) not ask forgiveness
لَا تَسْتَغْفِرْ
மன்னிப்புத் தேடாதீர்
for them
لَهُمْ
அவர்களுக்காக
If you ask forgiveness
إِن تَسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத் தேடினாலும்
for them
لَهُمْ
அவர்களுக்காக
seventy
سَبْعِينَ
எழுபது
times
مَرَّةً
முறை
never will Allah forgive
فَلَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
will Allah forgive
ٱللَّهُ
அல்லாஹ்
[for] them
لَهُمْۚ
அவர்களை
That (is) because they
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தனர்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and His Messenger
وَرَسُولِهِۦۗ
இன்னும் அவனுடைய தூதரை
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(does) not guide
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
the people the defiantly disobedient
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
மக்கள்/பாவிகளான

istaghfir lahum aw laa tastaghfir lahum in tastaghfir lahum sab'eena marratan falany yaghfiral laahu lahum; zaalika bi annahum kafaroo billaahi wa Rasoolih; wallaahu laa yahdil qawmal faasiqeen (at-Tawbah 9:80)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீங்கள் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீங்கள் எழுபது தடவைகள் மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

English Sahih:

Ask forgiveness for them, [O Muhammad], or do not ask forgiveness for them. If you should ask forgiveness for them seventy times – never will Allah forgive them. That is because they disbelieved in Allah and His Messenger, and Allah does not guide the defiantly disobedient people. ([9] At-Tawbah : 80)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.