அதற்கு (நூஹ் நபி) "என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
English Sahih:
[Noah] said, "My Lord, I seek refuge in You from asking that of which I have no knowledge. And unless You forgive me and have mercy upon me, I will be among the losers." ([11] Hud : 47)
1 Jan Trust Foundation
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் இறைவா! எனக்கு ஞானமில்லாததை உன்னிடம் நான் கேட்பதை விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ என்னை மன்னிக்கவில்லையெனில், எனக்கு கருணை காட்டவில்லையெனில் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன்”என்று கூறினார்.