(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன்.
English Sahih:
Have they not seen that We set upon the land, reducing it from its borders? And Allah decides; there is no adjuster of His decision. And He is swift in account. ([13] Ar-Ra'd : 41)
1 Jan Trust Foundation
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.