(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள்.
English Sahih:
That is from what your Lord has revealed to you, [O Muhammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allah another deity, lest you be thrown into Hell, blamed and banished. ([17] Al-Isra : 39)
1 Jan Trust Foundation
இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இவை, உமக்கு உம் இறைவன் வஹ்யி அறிவித்த ஞானத்திலிருந்து உள்ளவை. அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, (இறை அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில் எறியப்படுவீர்.