நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுது அவர்களை (உதவியாக) அழைக்கவில்லை. அன்றி, அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் (அவர்களில் சிலரை படைக்க சிலரை உதவியாக) நாம் அவர்களை அழைக்கவில்லை. வழி கெடுக்கும் இந்த ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம்முடைய சகாக்களாக ஆக்கிக் கொள்ளவில்லை.
English Sahih:
I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants. ([18] Al-Kahf : 51)
1 Jan Trust Foundation
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள் இன்னும் பூமியை படைத்ததிலும் (ஏன்) அவர்களையே படைத்ததிலும் அவர்களை நான் (என் உதவிக்கு) ஆஜராக்கவில்லை. வழிகெடுப்பவர்களை உதவியாளர்களாக எடுத்துக் கொள்பவனாக நான் இருக்கவில்லை.