Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௮௭

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ ۖ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِۗ اَفَكُلَّمَا جَاۤءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰىٓ اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ   ( البقرة: ٨٧ )

And indeed
وَلَقَدْ
திட்டவட்டமாக
We gave
ءَاتَيْنَا
கொடுத்தோம்
Musa
مُوسَى
மூஸாவிற்கு
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
and We followed up
وَقَفَّيْنَا
இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம்
from after him
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
with [the] Messengers
بِٱلرُّسُلِۖ
தூதர்களை
And We gave
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
Isa
عِيسَى
ஈஸாவிற்கு
(the) son
ٱبْنَ
மகன்
(of) Maryam
مَرْيَمَ
மர்யமுடைய
[the] clear signs
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
and We supported him
وَأَيَّدْنَٰهُ
இன்னும் பலப்படுத்தினோம்/அவரை
(with)
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
the Holy Spirit
ٱلْقُدُسِۗ
பரிசுத்தமான
Is it (not) so (that) whenever came to you
أَفَكُلَّمَا جَآءَكُمْ
வந்தபோதெல்லாம்/உங்களுக்கு
a Messenger
رَسُولٌۢ
ஒரு தூதர்
with what (does) not desire
بِمَا لَا تَهْوَىٰٓ
எதைக் கொண்டு/விரும்பவில்லை
yourselves
أَنفُسُكُمُ
மனங்கள்/உங்கள்
you acted arrogantly?
ٱسْتَكْبَرْتُمْ
பெருமையடித்தீர்கள்
So a party
فَفَرِيقًا
ஒரு பிரிவினரை
you denied
كَذَّبْتُمْ
பொய்ப்பித்தீர்கள்
and a party
وَفَرِيقًا
இன்னும் ஒரு பிரிவினரை
you kill(ed)
تَقْتُلُونَ
கொலை செய்கிறீர்கள்

Wa laqad aatainaa Moosal Kitaaba wa qaffainaa mim ba'dihee bir Rusuli wa aatainaa 'Eesab-na-Maryamal baiyinaati wa ayyadnaahu bi Roohil Qudus; afakullamaa jaaa'akum Rasoolum bimaa laa tahwaaa anfusukumus takbartum fafareeqan kazzabtum wa fareeqan taqtuloon (al-Baq̈arah 2:87)

Abdul Hameed Baqavi:

தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்!

English Sahih:

And We did certainly give Moses the Scripture [i.e., the Torah] and followed up after him with messengers. And We gave Jesus, the son of Mary, clear proofs and supported him with the Pure Spirit [i.e., the angel Gabriel]. But is it [not] that every time a messenger came to you, [O Children of Israel], with what your souls did not desire, you were arrogant? And a party [of messengers] you denied and another party you killed. ([2] Al-Baqarah : 87)

1 Jan Trust Foundation

மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.