Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௬

وَاِذَا رَاٰكَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًاۗ اَهٰذَا الَّذِيْ يَذْكُرُ اٰلِهَتَكُمْۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ   ( الأنبياء: ٣٦ )

And when you see
وَإِذَا رَءَاكَ
உம்மைப் பார்த்தால்
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
not they take you
إِن يَتَّخِذُونَكَ
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
except
إِلَّا
தவிர
(in) ridicule
هُزُوًا
பரிகாசமாகவே
"Is this
أَهَٰذَا
இவரா
the one who mentions
ٱلَّذِى يَذْكُرُ
விமர்ச்சிக்கிறார்
your gods?"
ءَالِهَتَكُمْ
உங்களது கடவுள்களை
And they
وَهُم
அவர்களோ
at (the) mention
بِذِكْرِ
பெயர் கூறுவதையும்
(of) the Most Gracious
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
[they]
هُمْ
அவர்கள்
(are) disbelievers
كَٰفِرُونَ
மறுக்கின்றனர்

Wa izaa ra aakal lazeena kafarooo iny-yattakhizoonaka illa huzuwaa; ahaazal lazee yazkuru aalihatakum wa hum bi zikrir Rahmaani hum kaafiroon (al-ʾAnbiyāʾ 21:36)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்கள் உங்களைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் ஒருவரை நோக்கி) "உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?" என்று உங்களை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாதிருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.

English Sahih:

And when those who disbelieve see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one who mentions [i.e., insults] your gods?" And they are, at the mention of the Most Merciful, disbelievers. ([21] Al-Anbya : 36)

1 Jan Trust Foundation

இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.