(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) யாதொரு அத்தாட்சியும் அளிக்கவில்லை; அன்றி, அவர்களிடம் கல்வி சம்பந்தமான யாதொரு ஆதாரமும் இல்லை. இத்தகைய அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்.
English Sahih:
And they worship besides Allah that for which He has not sent down authority and that of which they have no knowledge. And there will not be for the wrongdoers any helper. ([22] Al-Hajj : 71)
1 Jan Trust Foundation
மேலும்| இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும் அவர்களுக்கு எதைப் பற்றி அறவே (எவ்வித) அறிவும் இல்லையோ அதையும்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்யாரும் இல்லை.