Laisa 'alaikum junaahun ann tadkhuloo buyootan ghaira maskoonatin feeha mataa'ul lakum; wallaahu ya'lamu maa tubdoona wa maa taktumoon (an-Nūr 24:29)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத யாதொரு வீட்டில் உங்களுடைய சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்.
English Sahih:
There is no blame upon you for entering houses not inhabited in which there is convenience for you. And Allah knows what you reveal and what you conceal. ([24] An-Nur : 29)
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வசிக்கப்படாத வீடுகளில் -அவற்றில் உங்களுக்கு பொருள் இருந்து -நீங்கள் நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் நன்கறிவான்.