Wa Huwal lazee marajal bahraini haazaa 'azbun furaatunw wa haazaa milhun ujaaj; wa ja'ala bainahumaa barzakhanw wa hijram mahjooraa (al-Furq̈ān 25:53)
Abdul Hameed Baqavi:
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கின்றான்.
English Sahih:
And it is He who has released [simultaneously] the two seas [i.e., bodies of water], one fresh and sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition. ([25] Al-Furqan : 53)
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் முற்றிலும் தடுக்கக்கூடிய தடுப்பையும் அவன் ஆக்கினான்.