فَالْتَقَطَهٗٓ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًاۗ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕيْنَ ( القصص: ٨ )
Faltaqatahooo Aalu Fir'awna li yakoona lahum 'aduwwanw wa hazanaa; inna Fir'awna wa Haamaana wa junooda humaa kaanoo khaati'een (al-Q̈aṣaṣ 28:8)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர்.
English Sahih:
And the family of Pharaoh picked him up [out of the river] so that he would become to them an enemy and a [cause of] grief. Indeed, Pharaoh and Haman and their soldiers were deliberate sinners. ([28] Al-Qasas : 8)
1 Jan Trust Foundation
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.