Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௩

وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَنَّةِ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ  ( الزمر: ٧٣ )

And (will) be driven
وَسِيقَ
கொண்டு வரப்படுவார்(கள்)
those who feared
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
அஞ்சியவர்களை
their Lord
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
to Paradise
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
(in) groups
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
until
حَتَّىٰٓ
இறுதியாக
when they reach it
إِذَا جَآءُوهَا
அதற்கருகில் அவர்கள் வரும்போது
and (will) be opened
وَفُتِحَتْ
இன்னும் திறக்கப்படும்
its gates
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
and (will) say
وَقَالَ
கூறுவார்கள்
to them
لَهُمْ
அவர்களுக்கு
its keepers
خَزَنَتُهَا
அதன் காவலாளிகள்
"Peace be
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
upon you
عَلَيْكُمْ
உங்களுக்கு
you have done well
طِبْتُمْ
நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்
so enter it
فَٱدْخُلُوهَا
ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!
(to) abide eternally"
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக

Wa seeqal lazeenat taqaw Rabbahum ilal Jannati zumaran hattaaa izaa jaaa'oohaa wa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaa salaamun 'alaikum tibtum fadkhuloohaa khaalideen (az-Zumar 39:73)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள், (அந்நாளில் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும், உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கி விடுங்கள்" என்று கூறுவார்கள்.

English Sahih:

But those who feared their Lord will be driven to Paradise in groups until, when they reach it while its gates have been opened and its keepers say, "Peace be upon you; you have become pure; so enter it to abide eternally therein," [they will enter]. ([39] Az-Zumar : 73)

1 Jan Trust Foundation

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி| “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).