Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௪

۞ لَا خَيْرَ فِيْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِۗ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا   ( النساء: ١١٤ )

(There is) no
لَّا
அறவே இல்லை
good
خَيْرَ
நன்மை
in much
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
of
مِّن
இருந்து
their secret talk
نَّجْوَىٰهُمْ
அவர்களின் ரகசியம்
except (he) who
إِلَّا مَنْ
தவிர/எவர்
orders
أَمَرَ
ஏவினார்
charity
بِصَدَقَةٍ
தர்மத்தை
or
أَوْ
அல்லது
kindness
مَعْرُوفٍ
நன்மையை
or
أَوْ
அல்லது
conciliation
إِصْلَٰحٍۭ
சமாதானத்தை
between
بَيْنَ
இடையில்
the people
ٱلنَّاسِۚ
மக்கள்
And who
وَمَن
எவர்
does
يَفْعَلْ
செய்வார்
that
ذَٰلِكَ
அதை
seeking
ٱبْتِغَآءَ
நாடி
pleasure
مَرْضَاتِ
பொருத்தம்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
then soon We will give him
فَسَوْفَ نُؤْتِيهِ
தருவோம்/அவர்களுக்கு
a reward
أَجْرًا
கூலியை
great
عَظِيمًا
மகத்தானது

laa khaira fee kaseerim min najwaahum illaa man amara bisadaqatin aw ma'roofin aw islaahim bainan naas; wa mai yaf'al zaalikab tighaaa'a mardaatil laahi fa sawfa nu'teehi ajran 'azeemaa (an-Nisāʾ 4:114)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (உங்களுடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.

English Sahih:

No good is there in much of their private conversation, except for those who enjoin charity or that which is right or conciliation between people. And whoever does that seeking means to the approval of Allah – then We are going to give him a great reward. ([4] An-Nisa : 114)

1 Jan Trust Foundation

(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.