Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَآ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ اَصْحٰبَ السَّبْتِ ۗ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا  ( النساء: ٤٧ )

O you who (have) been given
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களே!
the Book
ٱلْكِتَٰبَ
வேதம்
believe
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
in what We (have) revealed
بِمَا نَزَّلْنَا
எதை/இறக்கினோம்
confirming
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
what is with you
لِّمَا مَعَكُم
எதை/உங்களுடன்
from before
مِّن قَبْلِ
முன்னர்
[that] We efface
أَن نَّطْمِسَ
நாம் மாற்றுவது
faces
وُجُوهًا
முகங்களை
and turn them
فَنَرُدَّهَا
அவற்றை திருப்பி விடுவோம்
on
عَلَىٰٓ
மீது
their backs
أَدْبَارِهَآ
அவற்றின்பின்புறங்கள்
or We curse them
أَوْ نَلْعَنَهُمْ
அல்லது/அவர்களை சபிப்போம்
as
كَمَا
போல்
We cursed
لَعَنَّآ
சபித்தோம்
companions (of) the Sabbath
أَصْحَٰبَ ٱلسَّبْتِۚ
சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை
And is
وَكَانَ
ஆகும்
(the) command
أَمْرُ
கட்டளையிட்டது
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்
(always) executed
مَفْعُولًا
நிறைவேற்றப்பட்டே

yaaa aiyuha lazeena ootu Kitaaba aaminoo bimaa nazzalnaa musadiqallimaa ma'akum min qabli an natmisa wujoohan fanaruddahaa 'alaaa adbaarihaaa aw nal'anahum kamaa la'annaaa Ashaabas Sabt; wa kaana amrul laahi maf'oolaa (an-Nisāʾ 4:47)

Abdul Hameed Baqavi:

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கின்றது. இன்றேல் (உங்கள் முகங்களை மாற்றி அதனைப் பின்புறமாகத் திருப்பி விடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) "அஸ்ஹாபுஸ்ஸப்தை" நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.

English Sahih:

O you who were given the Scripture, believe in what We have sent down [to Prophet Muhammad (^)], confirming that which is with you, before We obliterate faces and turn them toward their backs or curse them as We cursed the sabbath-breakers. And ever is the matter [i.e., decree] of Allah accomplished. ([4] An-Nisa : 47)

1 Jan Trust Foundation

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.