(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத்தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார்களோ அவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுஅளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
English Sahih:
Have you not seen those who claim themselves to be pure? Rather, Allah purifies whom He wills, and injustice is not done to them, [even] as much as a thread [inside a date seed]. ([4] An-Nisa : 49)
1 Jan Trust Foundation
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.