Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௯

يٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِيْنَ فِى الْاَرْضِۖ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَأْسِ اللّٰهِ اِنْ جَاۤءَنَا ۗقَالَ فِرْعَوْنُ مَآ اُرِيْكُمْ اِلَّا مَآ اَرٰى وَمَآ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ  ( غافر: ٢٩ )

O my people!
يَٰقَوْمِ
எனது மக்களே!
For you
لَكُمُ
உங்களுக்கு
(is) the kingdom
ٱلْمُلْكُ
ஆட்சி
today
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
dominant
ظَٰهِرِينَ
நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள்
in the land
فِى ٱلْأَرْضِ
பூமியில்
but who
فَمَن
யார்?
will help us
يَنصُرُنَا
நமக்கு உதவுவார்
from (the) punishment
مِنۢ بَأْسِ
தண்டனையில்இருந்து
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
if it came to us"
إِن جَآءَنَاۚ
நம்மிடம்அதுவந்தால்
Said Firaun
قَالَ فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன் கூறினான்
"Not I show you
مَآ أُرِيكُمْ
உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன்
except
إِلَّا
தவிர
what I see
مَآ أَرَىٰ
நான் கருதுவதையே
and not I guide you
وَمَآ أَهْدِيكُمْ
உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்
except (to the) path
إِلَّا سَبِيلَ
பாதையைத் தவிர
the right"
ٱلرَّشَادِ
நேரான

Yaa qawmi lakumul mulkul yawma zaahireena fil ardi famai yansurunaa mim baasil laahi in jaaa'anaa; qaala Fir'awnu maaa ureekum illaa maaa araa wa maaa ahdeekum illaa sabeelar Rashaad (Ghāfir 40:29)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "என்னுடைய மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கின்றது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?" (என்றும் கூறினார்.) அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "நான் (சரி என்று) கண்டவைகளை தவிர (வேறொன் றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என்றும் கூறினான்.

English Sahih:

O my people, sovereignty is yours today, [your being] dominant in the land. But who would protect us from the punishment of Allah if it came to us?" Pharaoh said, "I do not show you except what I see, and I do not guide you except to the way of right conduct." ([40] Ghafir : 29)

1 Jan Trust Foundation

“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு| “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.