Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௮

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗوَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّأْتِيَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚفَاِذَا جَاۤءَ اَمْرُ اللّٰهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ࣖ   ( غافر: ٧٨ )

And certainly
وَلَقَدْ
திட்டவட்டமாக
We have sent
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
Messengers
رُسُلًا
பல தூதர்களை
before you before you
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
Among them
مِنْهُم
அவர்களில்
(are) some
مَّن
எவரை (சிலரை)
We have related
قَصَصْنَا
நாம் விவரித்தோம்
to you
عَلَيْكَ
உமக்கு
and among them
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
(are) some
مَّن
எவரை (சிலரை)
not We have related
لَّمْ نَقْصُصْ
நாம்விவரிக்கவில்லை
to you
عَلَيْكَۗ
உமக்கு
And not is
وَمَا كَانَ
முடியாது
for any Messenger
لِرَسُولٍ
எந்த ஒரு தூதருக்கும்
that he brings a Sign
أَن يَأْتِىَ بِـَٔايَةٍ
அவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்கு
except
إِلَّا
தவிர
by (the) permission
بِإِذْنِ
அனுமதி கொண்டே
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
So when comes
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
(the) Command
أَمْرُ
கட்டளை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
it will be decided
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
in truth
بِٱلْحَقِّ
நீதமாக
and will lose
وَخَسِرَ
நஷ்டமடைவார்(கள்)
there
هُنَالِكَ
அப்போது
the falsifiers
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்

Wa laqad arsalnaa Rusulam min qablika minhum man qasasnaa 'alaika wa minhum mal lam naqsus 'alaik; wa maa kaana li Rasoolin any yaatiya bi Aayatin illaa bi iznil laah; fa izaa jaaa'a amrul laahi qudiya bilhaqqi wa khasira hunaalikal mubtiloon (Ghāfir 40:78)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வினுடைய அனுமதியின்றி யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ் வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதனைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.

English Sahih:

And We have already sent messengers before you. Among them are those [whose stories] We have related to you, and among them are those [whose stories] We have not related to you. And it was not for any messenger to bring a sign [or verse] except by permission of Allah. So when the command of Allah comes, it will be concluded [i.e., judged] in truth, and the falsifiers will thereupon lose [all]. ([40] Ghafir : 78)

1 Jan Trust Foundation

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.