பின்னர், வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒருவகை புகைதான். அதனையும் பூமியையும் அவன் நோக்கி "நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள்" என்று கூறினான். அதற்கு அவைகள், "இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்" என்று கூறின.
English Sahih:
Then He directed Himself to the heaven while it was smoke and said to it and to the earth, "Come [into being], willingly or by compulsion." They said, "We have come willingly." ([41] Fussilat : 11)
1 Jan Trust Foundation
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்| “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவன் வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது (தண்ணீரில் இருந்து வெளியேறும்) ஓர் ஆவியாக இருந்தது. (அந்த ஆவியைத்தான் ஒரு வானமாக அவன் ஆக்கினான். அந்த ஒரு வானத்தில் இருந்து ஏழு வானங்களைப் படைத்தான்.) அவன் அதற்கும் (-வானத்திற்கும்) பூமிக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் வாருங்கள்” (உங்களுக்குள் படைக்கப்பட்டதை வெளிப்படுத்துங்கள்.) அவை இரண்டும் கூறின: “நாங்கள் விருப்பமுள்ளவர்களாகவே வந்தோம்.” (உனக்கு கீழ்ப்படிந்து உனது கட்டளையை ஏற்று நடப்போம். ஆகவே, சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இன்னும் அதனுள் அல்லாஹ் படைத்த மற்ற படைப்புகளையும் வானம் வெளிப்படுத்தியது. மலை, செடி கொடி, நதி, கடல், ஊர், கிராமம், பாலைவனம், காடுகள் என தன்னில் உள்ளவற்றை பூமி வெளிப்படுத்தியது.)