எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.
English Sahih:
And those who argue concerning Allah after He has been responded to – their argument is invalid with their Lord, and upon them is [His] wrath, and for them is a severe punishment. ([42] Ash-Shuraa : 16)
1 Jan Trust Foundation
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களின் வாதங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே! அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.