(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை நீங்கள் புறக்கணித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுங்கள். (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
English Sahih:
Say, [O Muhammad], to those who have believed that they [should] forgive those who expect not the days of Allah [i.e., of His retribution] so that He may recompense a people for what they used to earn. ([45] Al-Jathiyah : 14)
1 Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்| அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுவீராக! (பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை ஆதரவு வைக்காதவர்களை அவர்கள் மன்னித்து விடட்டும். இறுதியாக ஒரு கூட்டத்திற்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு (அவர்களின் தீமைகளுக்கு) தண்டனை கொடுப்பான்.