Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௦

قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ۗمَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَۗ اُولٰۤىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَاۤءِ السَّبِيْلِ  ( المائدة: ٦٠ )

Say
قُلْ
கூறுவீராக
"Shall I inform you
هَلْ أُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
(of) worse
بِشَرٍّ
மிகக் கெட்டவனை
than
مِّن
விட
that
ذَٰلِكَ
இதை
(as) recompense
مَثُوبَةً
தண்டனையால்
from Allah?
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
Whom
مَن
எவர்
has (been) cursed
لَّعَنَهُ
சபித்தான்/அவரை
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
and He became angry
وَغَضِبَ
இன்னும் கோபித்தான்
with him
عَلَيْهِ
அவர்(கள்) மீது
and made
وَجَعَلَ
ஆக்கினான்
of them
مِنْهُمُ
அவர்களில்
[the] apes
ٱلْقِرَدَةَ
குரங்குகளாக
and [the] swines
وَٱلْخَنَازِيرَ
இன்னும் பன்றிகளாக
and (who) worshipped
وَعَبَدَ
இன்னும் வணங்கினார்(கள்)
the false deities
ٱلطَّٰغُوتَۚ
ஷைத்தானை
Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
(are) worse
شَرٌّ
மிகக் கெட்டவர்கள்
(in) position
مَّكَانًا
தகுதியால்
and farthest astray
وَأَضَلُّ
இன்னும் மிகவும் வழிதவறியவர்கள்
from
عَن
இருந்து
(the) even
سَوَآءِ
நேரான (நடு)
way"
ٱلسَّبِيلِ
பாதை

Qul hal unabbi'ukum bisharrim min zaalika masoobatan 'indal laah; malla'ana hul laahu wa ghadiba 'alaihi wa ja'ala minhumul qiradata wal khanaazeera wa 'abadat Taaghoot; ulaaa'ika sharrum makaananw wa adallu 'an Sawaaa'is Sabeel (al-Māʾidah 5:60)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" (என்று நபியே! நீங்கள் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். அன்றி, நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று நீங்கள் கூறுங்கள்.

English Sahih:

Say, "Shall I inform you of [what is] worse than that as penalty from Allah? [It is that of] those whom Allah has cursed and with whom He became angry and made of them apes and pigs and slaves of Taghut. Those are worse in position and further astray from the sound way." ([5] Al-Ma'idah : 60)

1 Jan Trust Foundation

“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.