Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௮

هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ تَأْتِيَهُمُ الْمَلٰۤىِٕكَةُ اَوْ يَأْتِيَ رَبُّكَ اَوْ يَأْتِيَ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ ۗيَوْمَ يَأْتِيْ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِيْٓ اِيْمَانِهَا خَيْرًاۗ قُلِ انْتَظِرُوْٓا اِنَّا مُنْتَظِرُوْنَ   ( الأنعام: ١٥٨ )

Are they waiting
هَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
except that comes to them
إِلَّآ أَن تَأْتِيَهُمُ
தவிர/அவர்களிடம் வருவதை
the Angels
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
or
أَوْ
அல்லது
comes
يَأْتِىَ
வருவதை
your Lord
رَبُّكَ
உம் இறைவன்
or
أَوْ
அல்லது
comes
يَأْتِىَ
வருவதை
some (of)
بَعْضُ
சில
(the) Signs
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
(of) your Lord?
رَبِّكَۗ
உம் இறைவனின்
(The) Day
يَوْمَ
நாளில்
(when) comes
يَأْتِى
வரும்
some (of)
بَعْضُ
சில
(the) Signs
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
(of) your Lord
رَبِّكَ
உம் இறைவனின்
not will benefit
لَا يَنفَعُ
பலனளிக்காது
a soul
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
its faith
إِيمَٰنُهَا
அதன் நம்பிக்கை
not (if) it had believed
لَمْ تَكُنْ ءَامَنَتْ
நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
from before
مِن قَبْلُ
(அதற்கு) முன்னர்
or
أَوْ
அல்லது
earned
كَسَبَتْ
செய்தது
through its faith
فِىٓ إِيمَٰنِهَا
தன் நம்பிக்கையில்
any good
خَيْرًاۗ
ஒரு நன்மையை
Say
قُلِ
கூறுவீராக
"Wait
ٱنتَظِرُوٓا۟
எதிர்பாருங்கள்
Indeed, we
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
(are) those who wait"
مُنتَظِرُونَ
எதிர்பார்க்கிறோம்

hal yanzuroona illaaa an taatiyahumul malaaa'ikatu aw yaatiya Rabbuka aw yaatiya ba'du Aayaati Rabbik; yawma yaatee ba'du Aayaati Rabbika laa yanfa'u nafsan eemaanuhaa lam takun aamanat min qablu aw kasabat feee eemaanihaa khairaa; qulin tazirooo innaa muntaziroon (al-ʾAnʿām 6:158)

Abdul Hameed Baqavi:

மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது. ஆகவே (அவர்களை நோக்கி "அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

English Sahih:

Do they [then] wait for anything except that the angels should come to them or your Lord should come or that there come some of the signs of your Lord? The Day that some of the signs of your Lord will come no soul will benefit from its faith as long as it had not believed before or had earned through its faith some good. Say, "Wait. Indeed, we [also] are waiting." ([6] Al-An'am : 158)

1 Jan Trust Foundation

மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.