Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௬

قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ قُلْ لَّآ اَتَّبِعُ اَهْوَاۤءَكُمْۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُهْتَدِيْنَ   ( الأنعام: ٥٦ )

Say
قُلْ
கூறுவீராக
"Indeed I
إِنِّى
நிச்சயமாக நான்
[I] am forbidden
نُهِيتُ
தடுக்கப்பட்டுள்ளேன்
that I worship
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
those whom you call
ٱلَّذِينَ تَدْعُونَ
எவற்றை/பிரார்த்திக்கிறீர்கள்
from" besides"
مِن دُونِ
தவிர
Allah"
ٱللَّهِۚ
அல்லாஹ்வை
Say
قُل
கூறுவீராக
"Not I follow
لَّآ أَتَّبِعُ
பின்பற்றமாட்டேன்
your (vain) desires
أَهْوَآءَكُمْۙ
உங்கள் ஆசைகளை
certainly I would go astray
قَدْ ضَلَلْتُ
வழி தவறிவிடுவேன்
then
إِذًا
அவ்வாறாயின்
and not I (would be)
وَمَآ أَنَا۠
நான் இருக்க மாட்டேன்
from the guided-ones"
مِنَ ٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களில்

Qul innee nuheetu an a'budal lazeena tad'oona min doonil laah; qul laaa attabi'u ahwaaa'akum qad dalaltu izanw wa maaa ana minal muhtadeen (al-ʾAnʿām 6:56)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (கடவுள்களென) அழைக்கின்றீர்களோ அவைகளை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே உங்களுடைய விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன். நேரான வழியை அடைந்தவனாக மாட்டேன்."

English Sahih:

Say, "Indeed, I have been forbidden to worship those you invoke besides Allah." Say, "I will not follow your desires, for I would then have gone astray, and I would not be of the [rightly] guided." ([6] Al-An'am : 56)

1 Jan Trust Foundation

“நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக| “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.