(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
English Sahih:
That is the guidance of Allah by which He guides whomever He wills of His servants. But if they had associated others with Allah, then worthless for them would be whatever they were doing. ([6] Al-An'am : 88)
1 Jan Trust Foundation
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி செலுத்துகிறான். அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும்.