Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௧

وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۗوَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ مَرَدُوْا عَلَى النِّفَاقِۗ لَا تَعْلَمُهُمْۗ نَحْنُ نَعْلَمُهُمْۗ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّوْنَ اِلٰى عَذَابٍ عَظِيْمٍ ۚ   ( التوبة: ١٠١ )

And among those
وَمِمَّنْ
இன்னும் எவர்களில்
around you
حَوْلَكُم
உங்களைச் சூழவுள்ள
of the bedouins
مِّنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
(are) hypocrites
مُنَٰفِقُونَۖ
நயவஞ்சகர்கள்
and (also) from people
وَمِنْ أَهْلِ
இன்னும் வாசிகளில்
(of) the Madinah
ٱلْمَدِينَةِۖ
மதீனா
They persist
مَرَدُوا۟
அவர்கள் ஊறி விட்டனர்
in
عَلَى
மீது
the hypocrisy
ٱلنِّفَاقِ
நயவஞ்சகம்
not you know them
لَا تَعْلَمُهُمْۖ
அறியமாட்டீர்/அவர்களை
We [We] know them
نَحْنُ نَعْلَمُهُمْۚ
நாம்/அறிவோம்/அவர்களை
We will punish them
سَنُعَذِّبُهُم
வேதனை செய்வோம்/அவர்களை
twice
مَّرَّتَيْنِ
இருமுறை
then
ثُمَّ
பிறகு
they will be returned
يُرَدُّونَ
திருப்பப்படுவார்கள்
to
إِلَىٰ
பக்கம்
a punishment
عَذَابٍ
வேதனையின்
great
عَظِيمٍ
பெரிய

Wa mimmann hawlakum minal A'raabi munaafiqoona wa min ahlil Madeenati maradoo 'alan nifaaq, laa ta'lamuhum nahnu na'lamuhum; sanu'azzibuhum marrataini summa yuraddoona ilaa 'azaabin 'azeem (at-Tawbah 9:101)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் பல நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீங்கள் அவர்களை அறியமாட்டீர்கள்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.

English Sahih:

And among those around you of the bedouins are hypocrites, and [also] from the people of Madinah. They have persisted in hypocrisy. You, [O Muhammad], do not know them, [but] We know them. We will punish them twice [in this world]; then they will be returned to a great punishment. ([9] At-Tawbah : 101)

1 Jan Trust Foundation

உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.