அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உங்களிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய(இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்.
English Sahih:
Those who believe in Allah and the Last Day would not ask permission of you to be excused from striving [i.e., fighting] with their wealth and their lives. And Allah is Knowing of those who fear Him. ([9] At-Tawbah : 44)
1 Jan Trust Foundation
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன்.