Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௯

وَمِنَ الْاَعْرَابِ مَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ۗ اَلَآ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ۗ سَيُدْخِلُهُمُ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ  ( التوبة: ٩٩ )

But among
وَمِنَ
இன்னும் இருந்து
the bedouins
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
(is he) who
مَن
எவர்
believes
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and the Day the Last
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
and takes what
وَيَتَّخِذُ مَا
இன்னும் எடுத்துக் கொள்கிறார்கள்/எதை
he spends
يُنفِقُ
தர்மம் புரிகிறார்(கள்)
(as) means of nearness
قُرُبَٰتٍ
வணக்கங்களாக
with Allah
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
and blessings
وَصَلَوَٰتِ
இன்னும் பிரார்த்தனைகளாக
(of) the Messenger
ٱلرَّسُولِۚ
தூதரின்
Behold!
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
Indeed, it
إِنَّهَا
நிச்சயமாக அது
(is) a means of nearness
قُرْبَةٌ
வணக்கம்
for them
لَّهُمْۚ
அவர்களுக்கு
Allah will admit them
سَيُدْخِلُهُمُ
நுழைப்பான்/அவர்களை
Allah will admit them
ٱللَّهُ
அல்லாஹ்
to His Mercy
فِى رَحْمَتِهِۦٓۗ
தன் கருணையில்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa minal A'raabi mai yu'minu billaahi wal yawmil AAkhiri wa yattakhizu maa yunfiqu qurubaatin 'indal laahi wa salawaatir Rasool; alaaa innahaa qurbatul lahum; sayudkhiluhumul laahu fee rahmatih; innal laaha Ghafoorur Raheem (at-Tawbah 9:99)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனை களுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.

English Sahih:

But among the bedouins are some who believe in Allah and the Last Day and consider what they spend as means of nearness to Allah and of [obtaining] invocations of the Messenger. Unquestionably, it is a means of nearness for them. Allah will admit them to His mercy. Indeed, Allah is Forgiving and Merciful. ([9] At-Tawbah : 99)

1 Jan Trust Foundation

கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.