Wa ammal lazeena su'idoo fafil Jannati khaalideena feehaa maa daamatis samaawaatu wal ardu illaa maa shaaa'a Rabbuk; ataaa'an ghaira majzooz (Hūd 11:108)
Abdul Hameed Baqavi:
நற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும்.
English Sahih:
And as for those who were [destined to be] prosperous, they will be in Paradise, abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will – a bestowal uninterrupted. ([11] Hud : 108)
நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நற்பாக்கியமடைந்தவர்கள் சொர்க்கத்தில் (நுழைக்கப்படுவார்கள்). உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்.