Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௯

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَاۤءَلُوْا بَيْنَهُمْۗ قَالَ قَاۤىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْۗ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍۗ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْۗ فَابْعَثُوْٓا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖٓ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَآ اَزْكٰى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا   ( الكهف: ١٩ )

And similarly
وَكَذَٰلِكَ
அவ்வாறே
We raised them
بَعَثْنَٰهُمْ
எழுப்பினோம் / அவர்களை
that they might question
لِيَتَسَآءَلُوا۟
அவர்கள் கேட்டுக் கொள்வதற்காக
among them
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
Said
قَالَ
கூறினார்
a speaker
قَآئِلٌ
கூறுபவர் ஒருவர்
among them
مِّنْهُمْ
அவர்களில்
"How long
كَمْ
எத்தனை
have you remained?"
لَبِثْتُمْۖ
தங்கினீர்கள்
They said
قَالُوا۟
கூறினர்
"We have remained
لَبِثْنَا
தங்கினோம்
a day
يَوْمًا
ஒரு நாள்
or
أَوْ
அல்லது
a part (of) a day"
بَعْضَ يَوْمٍۚ
ஒரு நாளின் சில பகுதி
They said
قَالُوا۟
கூறினர்
"Your Lord
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
knows best
أَعْلَمُ
மிக அறிந்தவன்
how long you have remained
بِمَا لَبِثْتُمْ
நீங்கள் தங்கியதை
So send
فَٱبْعَثُوٓا۟
ஆகவே அனுப்புங்கள்
one of you
أَحَدَكُم
உங்களில் ஒருவரை
with this silver coin of yours
بِوَرِقِكُمْ
உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு
with this silver coin of yours
هَٰذِهِۦٓ
இந்த
to the city
إِلَى ٱلْمَدِينَةِ
பட்டணத்திற்கு
and let him see
فَلْيَنظُرْ
அவர் கவனிக்கட்டும்
which is
أَيُّهَآ
அதில் யார்?
the purest
أَزْكَىٰ
மிக சுத்தமானவர்
food
طَعَامًا
உணவால்
and let him bring to you
فَلْيَأْتِكُم
வரட்டும்/உங்களுக்கு
provision
بِرِزْقٍ
உணவைக் கொண்டு
from it
مِّنْهُ
அவரிடமிருந்து
and let him be cautious
وَلْيَتَلَطَّفْ
இன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும்
And let not be aware And let not be aware
وَلَا يُشْعِرَنَّ
இன்னும் உணர்த்தி விட வேண்டாம்
about you
بِكُمْ
உங்களைப் பற்றி
anyone"
أَحَدًا
ஒருவருக்கும்

Wa kazaalika ba'asnaahum liyatasaaa'aloo bainahum; qaala qaaa'ilum minhum kam labistum qaaloo labisnaa yawman aw ba'da yawm; qaaloo Rabbukum a'almu bimaa labistum fab'asooo ahadakum biwariqikum haazihee ilal madeenati falyanzur ayyuhaaa azkaa ta'aaman falyaatikum birizqim minhu walyatalattaf wa laa yush'iranna bikum ahadaa (al-Kahf 18:19)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர். (மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி "உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.

English Sahih:

And similarly, We awakened them that they might question one another. Said a speaker from among them, "How long have you remained [here]?" They said, "We have remained a day or part of a day." They said, "Your Lord is most knowing of how long you remained. So send one of you with this silver coin of yours to the city and let him look to which is the best of food and bring you provision from it and let him be cautious. And let no one be aware of you. ([18] Al-Kahf : 19)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).