Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௧

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ ۗ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ۗ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ۗ اُولٰۤىِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ࣖ  ( البقرة: ٢٢١ )

And (do) not [you] marry
وَلَا تَنكِحُوا۟
மணக்காதீர்கள்
[the] polytheistic women
ٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கும் பெண்களை
until
حَتَّىٰ
வரை
they believe
يُؤْمِنَّۚ
அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
And a bondwoman
وَلَأَمَةٌ
திட்டமாக ஓர் அடிமைப் பெண்
(who is) believing
مُّؤْمِنَةٌ
(பெண்) நம்பிக்கையாளர்
(is) better
خَيْرٌ
சிறந்தவள்
than
مِّن
விட
a polytheistic woman
مُّشْرِكَةٍ
இணைவைப்பவள்
[and] even if she pleases you
وَلَوْ أَعْجَبَتْكُمْۗ
அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
And (do) not give in marriage (your women)
وَلَا تُنكِحُوا۟
இன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்
(to) [the] polytheistic men
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களுக்கு
until they believe
حَتَّىٰ يُؤْمِنُوا۟ۚ
அவர்கள் நம்பிக்கை கொள்கிறவரை
and a bondman
وَلَعَبْدٌ
திட்டமாக ஓர்அடிமை
(who is) believing
مُّؤْمِنٌ
நம்பிக்கையாளர்
(is) better
خَيْرٌ
சிறந்தவர்
than
مِّن
விட
a polytheistic man
مُّشْرِكٍ
இணைவைப்பவன்
[and] even if he pleases you
وَلَوْ أَعْجَبَكُمْۗ
அவன் கவர்ந்தாலும் சரியே/உங்களை
[Those]
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
they invite
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
to the Fire
إِلَى ٱلنَّارِۖ
நரகத்திற்கு
and Allah
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
invites
يَدْعُوٓا۟
அழைக்கிறான்
to Paradise
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
and [the] forgiveness
وَٱلْمَغْفِرَةِ
இன்னும் மன்னிப்பு
by His permission
بِإِذْنِهِۦۖ
அவனின் கட்டளைக் கொண்டு
And He makes clear
وَيُبَيِّنُ
இன்னும் விவரிக்கிறான்
His Verses
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
for the people
لِلنَّاسِ
மக்களுக்கு
so that they may take heed
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் உபதேசம் பெறுவதற்காக

Wa laatankihul mushrikaati hattaa yu'minn; wa la amatum mu'minatun khairum mim mushrikatinw wa law a'jabatkum; wa laa tunkihul mushrikeena hattaa yu'minoo; wa la'abdummu'minun khairum mimmushrikinw wa law 'ajabakum; ulaaa'ika yad'oona ilan Naari wallaahu yad'ooo ilal Jannati walmaghfirati biiznihee wa yubaiyinu Aayaatihee linnaasi la'allahum yatazakkaroon (al-Baq̈arah 2:221)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.

English Sahih:

And do not marry polytheistic women until they believe. And a believing slave woman is better than a polytheist, even though she might please you. And do not marry polytheistic men [to your women] until they believe. And a believing slave is better than a polytheist, even though he might please you. Those invite [you] to the Fire, but Allah invites to Paradise and to forgiveness, by His permission. And He makes clear His verses [i.e., ordinances] to the people that perhaps they may remember. ([2] Al-Baqarah : 221)

1 Jan Trust Foundation

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.