Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௫

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِيْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَاۤءً ۨالْعَاكِفُ فِيْهِ وَالْبَادِۗ وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَادٍۢ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِيْمٍ ࣖ  ( الحج: ٢٥ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
and hinder
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
from (the) way
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and Al-Masjid Al-Haraam
وَٱلْمَسْجِدِ
இன்னும் அல்மஸ்ஜிது
and Al-Masjid Al-Haraam
ٱلْحَرَامِ
ஹராம்
which
ٱلَّذِى
எது
We made it
جَعَلْنَٰهُ
அதை ஆக்கியிருக்கிறோம்
for the mankind
لِلنَّاسِ
மக்களுக்கு
equal
سَوَآءً
பொதுவானது
(are) the resident
ٱلْعَٰكِفُ
தங்கிஇருப்பவருக்கும்
therein
فِيهِ
அதில்
and the visitor
وَٱلْبَادِۚ
வெளியிலிருந்து வருபவருக்கும்
and whoever
وَمَن
எவர்
intends therein
يُرِدْ فِيهِ
அதில் நாடுவாரோ
of deviation
بِإِلْحَادٍۭ
வரம்பு மீறுவதை
(or) wrongdoing
بِظُلْمٍ
அநியாயமாக
We will make him taste
نُّذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
of a punishment
مِنْ عَذَابٍ
வேதனையை
painful
أَلِيمٍ
வலி தருகின்ற

Innal lazeena kafaroo wa yasuddoona 'an sabeelil laahi wal Masjidil Haraamil lazee ja'alnaahu linnaasi sawaaa'anil 'aakifu feehi walbaad; wa mai yurid feehi bi ilhaadim bizulmin nuziqhu min 'azaabin aleem (al-Ḥajj 22:25)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதை(யில் செல்வதை)யும் தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்களாயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தடை செய்து கொண்டு, அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய விரும்பினால், அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.

English Sahih:

Indeed, those who have disbelieved and avert [people] from the way of Allah and [from] al-Masjid al-Haram, which We made for the people – equal are the resident therein and one from outside – and [also] whoever intends [a deed] therein of deviation [in religion] by wrongdoing – We will make him taste of a painful punishment. ([22] Al-Hajj : 25)

1 Jan Trust Foundation

நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.