அல்லாஹ் விதித்த யாதொரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் (உள்ள நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன.
English Sahih:
There is not to be upon the Prophet any discomfort concerning that which Allah has imposed upon him. [This is] the established way of Allah with those [prophets] who have passed on before. And ever is the command of Allah a destiny decreed. ([33] Al-Ahzab : 38)
1 Jan Trust Foundation
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் தனக்கு கடமையாக்கியதை செய்வதில் நபியின் மீது அறவே குற்றமிருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் (நபியே! உமக்கும் வழிமுறையாக ஆக்கப்பட்டது). அல்லாஹ்வின் செயல் நிறைவேற்றப்படுகின்ற தீர்ப்பாக இருக்கின்றது.