Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௮

۞ فَمَا لَكُمْ فِى الْمُنٰفِقِيْنَ فِئَتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ۗ اَتُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا   ( النساء: ٨٨ )

So what (is the matter) with you
فَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன?
concerning the hypocrites (that)
فِى ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களில்
(you have become) two parties?
فِئَتَيْنِ
இரு பிரிவினராக
While Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
cast them back
أَرْكَسَهُم
தாழ்த்தினான்/அவர்களை
for what
بِمَا
எதன் காரணமாக
they earned
كَسَبُوٓا۟ۚ
செய்தார்கள்
Do you wish
أَتُرِيدُونَ
நாடுகிறீர்களா?
that you guide
أَن تَهْدُوا۟
நீங்கள் நேர்வழிப்படுத்த
whom
مَنْ
எவரை
is let astray?
أَضَلَّ
வழிகெடுத்தான்
(by) Allah?
ٱللَّهُۖ
அல்லாஹ்
And whoever
وَمَن
இன்னும் எவரை
is let astray
يُضْلِلِ
வழிகெடுப்பான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
then never will you find
فَلَن تَجِدَ
அறவே காணமாட்டீர்
for him
لَهُۥ
அவருக்கு
a way
سَبِيلًا
ஒரு வழியை

Famaa lakum filmuna afiqeena fi'ataini wallaahu arkasahum bimaa kasaboo; atureedoona an tahdoo man adallal laahu wa mmai yudlilil laahu falan tajida lahoo sabeelaa (an-Nisāʾ 4:88)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கின்றீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டு விட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகின்றீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவர்களை அல்லாஹ் தவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு (மீட்சி பெற்றுத் தர) யாதொரு வழியையும் நீங்கள் காணமாட்டீர்கள்!

English Sahih:

What is [the matter] with you [that you are] two groups concerning the hypocrites, while Allah has made them fall back [into error and disbelief] for what they earned. Do you wish to guide those whom Allah has sent astray? And he whom Allah sends astray – never will you find for him a way [of guidance]. ([4] An-Nisa : 88)

1 Jan Trust Foundation

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.