அவன் தன் அடியார்களை அடக்கியே ஆளுகின்றான்; அன்றி உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகின்றான். அவர்கள் உங்களில் ஒவ்வொருவரையும் மரண (கால)ம் வரும் வரையில் பாதுகாத்து, பின்னர் அவரை இறக்கச் செய்கின்றனர்.அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.
English Sahih:
And He is the subjugator over His servants, and He sends over you guardian-angels until, when death comes to one of you, Our messengers [i.e., angels of death] take him, and they do not fail [in their duties]. ([6] Al-An'am : 61)
1 Jan Trust Foundation
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவரை (அவருடைய உயிரை) கைப்பற்றுகின்றனர். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.