Skip to main content

رَّسُولًا
ஒரு தூதரை
يَتْلُوا۟
ஓதிக் காண்பிக்கிறார்
عَلَيْكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مُبَيِّنَٰتٍ
தெளிவான(வை)
لِّيُخْرِجَ
வெளியேற்றுவதற்காக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى ٱلنُّورِۚ
ஒளியின் பக்கம்
وَمَن يُؤْمِنۢ
எவர்(கள்)/நம்பிக்கை கொண்டார்(கள்)
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَيَعْمَلْ
இன்னும் செய்வார்(கள்)
صَٰلِحًا
நன்மையை
يُدْخِلْهُ
அவர்களை பிரவேசிக்கவைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்குவார்கள்
فِيهَآ أَبَدًاۖ
அவற்றில்/எப்போதும்
قَدْ
திட்டமாக
أَحْسَنَ
அழகாக வைத்திருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُۥ
அவர்களுக்கு
رِزْقًا
வாழ்வாதாரத்தை

Rasoolany yatloo 'alaikum aayaatil laahi mubaiyinaatil liyukhrijal lazeena aamanoo wa 'amilus saalihaati minaz zulumaati ilan noor; wa many yu'mim billaahi wa ya;mal saalihany yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa abadan qad ahsanal laahu lahoo rizqqq

அன்றி, ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கின்றான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகின்றார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களை சுவனபதிகளில் புகச் செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.

Tafseer

ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
خَلَقَ
படைத்தான்
سَبْعَ سَمَٰوَٰتٍ
ஏழு வானங்களையும்
وَمِنَ ٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
مِثْلَهُنَّ
அவைப் போன்றதையும்
يَتَنَزَّلُ
இறங்குகின்றன
ٱلْأَمْرُ
கட்டளைகள்
بَيْنَهُنَّ
அவற்றுக்கு மத்தியில்
لِتَعْلَمُوٓا۟
நீங்கள் அறிவதற்காக
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
قَدْ
திட்டமாக
أَحَاطَ
சூழ்ந்துள்ளான்
بِكُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்களையும்
عِلْمًۢا
அறிவால்

Allaahul lazee khalaq Sab'a Samaawaatinw wa minal ardi mislahunna yatanazzalul amru bainahunna lita'lamooo annal laaha 'alaa kulli shai'in Qadeerunw wa annal laaha qad ahaata bikulli shai'in ilmaa

ஏழு வானங்களையும், அவைகளைப் போல் பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவைகளை படைத்தான்.

Tafseer