ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீங்கள் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்கள்.
English Sahih:
Which He [i.e., Allah] imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees. ([69] Al-Haqqah : 7)
1 Jan Trust Foundation
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அதை (-அந்த காற்றை) அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர், அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீத்த மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் (வீழ்ந்து கிடந்தனர்).