(மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள், இப்ராஹீமுக்கு நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி "லூத்துடைய) ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்து விடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக் காரர்களாக ஆகிவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
English Sahih:
And when Our messengers [i.e., angels] came to Abraham with the good tidings, they said, "Indeed, we will destroy the people of that [i.e., Lot's] city. Indeed, its people have been wrongdoers." ([29] Al-'Ankabut : 31)
1 Jan Trust Foundation
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நமது (வானவத்) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியுடன் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் இந்த ஊரில் வசிப்பவர்களை அழிக்கப் போகிறோம். நிச்சயமாக இதில் வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.”