Skip to main content

كَتَبَ
விதித்துவிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَأَغْلِبَنَّ
நிச்சயமாக வெல்வோம்
أَنَا۠
நானும்
وَرُسُلِىٓۚ
எனது தூதரும்தான்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
قَوِىٌّ
மிக வலிமை உள்ளவன்
عَزِيزٌ
மிகைத்தவன்

Katabal laahu la aghlibanna ana wa Rusulee; innal laaha qawiyyun 'Azeez

தானும், தன்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (அனைவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا تَجِدُ
நீர் காணமாட்டீர்
قَوْمًا
மக்களை
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
மறுமை நாளையும்
يُوَآدُّونَ
நேசிப்பவர்களாக
مَنْ
எவரை
حَآدَّ
முரண்படுகின்றார்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கும்
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
وَلَوْ كَانُوٓا۟
அவர்கள் இருந்தாலும் சரியே!
ءَابَآءَهُمْ
தங்கள் தந்தைகளாக
أَوْ
அல்லது
أَبْنَآءَهُمْ
தங்கள் பிள்ளைகளாக
أَوْ
அல்லது
إِخْوَٰنَهُمْ
தங்கள் சகோதரர்களாக
أَوْ
அல்லது
عَشِيرَتَهُمْۚ
தங்கள் குடும்பத்தினராக
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
كَتَبَ
உறுதிபடுத்திவிட்டான்
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
ٱلْإِيمَٰنَ
ஈமானை
وَأَيَّدَهُم
இன்னும் பலப்படுத்தினான்/அவர்களை
بِرُوحٍ
உதவியைக் கொண்டு
مِّنْهُۖ
தன் புறத்தில் இருந்து
وَيُدْخِلُهُمْ
இன்னும் அவர்களை நுழைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாக தங்குவார்கள்
فِيهَاۚ
அவற்றில்
رَضِىَ
பொருந்திக்கொள்வான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنْهُمْ
அவர்களை
وَرَضُوا۟ عَنْهُۚ
இன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
حِزْبُ
கட்சியினர்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
حِزْبَ
கட்சியினர்தான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُمُ
அவர்கள்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Laa tajidu qawmany yu'minoona billaahi wal yawmil aakhiri yuwaaaddoona man haaaddal laaha wa Rasoolahoo wa law kaanooo aabaaa'ahum aw abnaaa'ahum aw ikhwaa nahum aw 'asheeratahum; ulaaa'ika kataba fee quloobihi mul eemaana wa ayyadahum biroohimminhu wa yudkhilu hum jannatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; radiyal laahu 'anhum wa radoo 'anh; ulaaa 'ika hizbul laah; alaaa inna hizbal laahi humul muflihoon

(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer