Skip to main content

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் காணவில்லையா?
أَنَّا
நிச்சயமாக நாம்
نَأْتِى
வருகிறோம்
ٱلْأَرْضَ
பூமியை
نَنقُصُهَا
குறைக்கிறோம்/அதை
مِنْ
இருந்து
أَطْرَافِهَاۚ
அதன் ஓரங்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَحْكُمُ
தீர்ப்பளிக்கிறான்
لَا
அறவே இல்லை
مُعَقِّبَ
தடுப்பவர்
لِحُكْمِهِۦۚ
அவனுடைய தீர்ப்பை
وَهُوَ
அவன்
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்

Awalam yaraw annaa naatil arda nanqusuhaa min atraafihaa; wallaahu yahkumu laa mu'aqqiba lihukmih; wa Huwa saree'ul hisaab

(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன்.

Tafseer

وَقَدْ
திட்டமாக
مَكَرَ
சூழ்ச்சி செய்தனர்
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلْمَكْرُ
சூழ்ச்சி
جَمِيعًاۖ
அனைத்தும்
يَعْلَمُ
அறிவான்
مَا تَكْسِبُ
எதை/செய்கிறது
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍۗ
ஆன்மா
وَسَيَعْلَمُ
அறிவார்(கள்)
ٱلْكُفَّٰرُ
நிராகரிப்பவர்கள்
لِمَنْ
எவருக்கு
عُقْبَى
முடிவு
ٱلدَّارِ
மறுமை

Wa qad makaral lazeena min qablihim falillaahil makru jamee'aa; ya'lamu maa taksibu kullu nafs; wa sa ya'lamul kuffaaru liman 'uqbad daar

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ் விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வொரு ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகின்றான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

Tafseer

وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لَسْتَ
நீர் இல்லை
مُرْسَلًاۚ
தூதராக
قُلْ
கூறுவீராக
كَفَىٰ
போதுமாகி விட்டான்
بِٱللَّهِ
அல்லாஹ்
شَهِيدًۢا
சாட்சியால்
بَيْنِى
எனக்கு மத்தியில்
وَبَيْنَكُمْ
இன்னும் உங்களுக்கு மத்தியில்
وَمَنْ
இன்னும் எவர்
عِندَهُۥ
அவரிடம்
عِلْمُ
ஞானம்
ٱلْكِتَٰبِ
வேதத்தின்

Wa yaqoolul lazeena kafaroo lasta mursalaa; qul kafaa billaahi shaheedam bainee wa bainakum wa man 'indahoo 'ilmul Kitaab

(நபியே!) "நீங்கள் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, "இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேதத்தை உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்" என்று கூறுங்கள்.

Tafseer