Skip to main content

وَلَوْ أَنَّ
வேதம்/இருந்தால்
سُيِّرَتْ
நகர்த்தப்பட்டது
بِهِ
அதைக் கொண்டு
ٱلْجِبَالُ
மலைகள்
أَوْ قُطِّعَتْ
அல்லது/துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்
بِهِ
அதைக் கொண்டு
ٱلْأَرْضُ
பூமி
أَوْ كُلِّمَ
அல்லது/பேச வைக்கப்பட்டிருந்தால்...
بِهِ
அதைக் கொண்டு
ٱلْمَوْتَىٰۗ
மரணித்தவர்கள்
بَل لِّلَّهِ
மாறாக/அல்லாஹ்வுக்குரியனவே
ٱلْأَمْرُ
அதிகாரம்
جَمِيعًاۗ
அனைத்தும்
أَفَلَمْ يَا۟يْـَٔسِ
அறியவில்லையா?
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டனர்
أَن لَّوْ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهَدَى
நேர்வழி படுத்தியிருப்பான்
ٱلنَّاسَ
மக்களை
جَمِيعًاۗ
அனைவரை
وَلَا يَزَالُ
தொடர்ந்து இருக்கும்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
تُصِيبُهُم
அடையும்/அவர்களை
بِمَا
காரணமாக
صَنَعُوا۟
செய்தனர்
قَارِعَةٌ
ஒரு திடுக்கம்
أَوْ
அல்லது
تَحُلُّ
நீர் இறங்குவீர்
قَرِيبًا
அருகாமையில்
مِّن دَارِهِمْ
அவர்களின் ஊருக்கு
حَتَّىٰ
இறுதியாக
يَأْتِىَ
வரும்
وَعْدُ
வாக்குறுதி
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
ٱلْمِيعَادَ
வாக்குறுதியை

Wa law anna Quraanan suyyirat bihil jibaalu aw qutti'at bihil ardu aw kullima bihil mawtaa; bal lillaahil amru jamee'aa; afalam yai'asil lazeena aamanooo al law yashaaa 'ullaahu lahadan naasa jamee'aa; wa laa yazaalul lazeena kafaroo tuseebuhum bimaa sana'oo qaari'atun aw tahullu qareebam min daarihim hatta yaatiya wa'dul laah; innal laaha laa yukhliful mee'aad

(நபியே! நாம் இவர்களுக்கு இதனையன்றி வேறு) யாதொரு குர்ஆனை அருள் செய்து, அதைக் கொண்டு மலைகள் நகரும் படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும்படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்தி விடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) யாதேனுமோர் சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து ("நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய வாக்குறுதியில் தவறுவதில்லை.

Tafseer

وَلَقَدِ ٱسْتُهْزِئَ
திட்டமாக பரிகசிக்கப்பட்டனர்
بِرُسُلٍ
தூதர்கள்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فَأَمْلَيْتُ
நீட்டினேன்
لِلَّذِينَ
எவர்களுக்கு
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ثُمَّ
பிறகு
أَخَذْتُهُمْۖ
பிடித்தேன்/அவர்களை
فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தது
عِقَابِ
என் தண்டனை

Wa laqadis tuhzi'a bi Rusulim min qablika fa amlaitu lillazeena kafaroo summa akhaztuhum fakaifa kaana 'iqaab

(நபியே!) உங்களுக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என்னுடைய தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!)

Tafseer

أَفَمَنْ
யார்?
هُوَ
அவன்
قَآئِمٌ
நிர்வகிப்பவன்
عَلَىٰ
மீது
كُلِّ
ஒவ்வொரு
نَفْسٍۭ
ஆன்மா
بِمَا كَسَبَتْۗ
அவை செய்தவற்றுக்கு
وَجَعَلُوا۟
அவர்கள் ஏற்படுத்தினர்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
شُرَكَآءَ
இணைகளை
قُلْ
கூறுவீராக
سَمُّوهُمْۚ
பெயரிடுங்கள் அவற்றுக்கு
أَمْ تُنَبِّـُٔونَهُۥ
அல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்கு
بِمَا لَا
அவன் அறியாததை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَم
அல்லது
بِظَٰهِرٍ مِّنَ
பொய்யான சொல்லை
بَلْ
மாறாக
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
لِلَّذِينَ
எவர்களுக்கு
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مَكْرُهُمْ
சூழ்ச்சி அவர்களுடைய
وَصُدُّوا۟
இன்னும் தடுக்கப்பட்டனர்
عَنِ ٱلسَّبِيلِۗ
பாதையிலிருந்து
وَمَن يُضْلِلِ
எவரை/ வழிகெடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
مِنْ هَادٍ
நேர்வழிகாட்டுபவர் எவரும்

Afaman Huwa qaaa'imun 'alaa kulli nafsim bimaa kasabat; wa ja'aloo illlaahi shurakaaa'a qul samoohum; am tunabbi'oona hoo bimaa laa ya'lamu fil ardi; am bizaahirim minal qawl; bal zuyyina lillazeena kafaroo makruhum wa suddoo 'anis sabeel; wa mai yudlilil laaahu famaa lahoo min haad;

அவனோ, ஒவ்வொரு ஆத்மாவும் செய்யும் ஒவ்வொன் றையும் நன்கறிந்தவன். அவர்களோ (பொய்யான தெய்வங்களை) அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளி களைத் தண்டிக்காது விட்டுவிடுவானா? நபியே! நீங்கள் அவர்களை நோக்கி, "நீங்கள் கூறும் தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள் தாமா?" என்று கேளுங்கள். இவைகளில் ஒன்றுமில்லை! இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப் பெற்றுவிட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டுவிட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை.

Tafseer

لَّهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
ٱلدُّنْيَاۖ
உலகம்
وَلَعَذَابُ
வேதனைதான்
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَشَقُّۖ
மிக சிரமமானது
وَمَا
இல்லை
لَهُم
அவர்களை
مِّنَ
இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்
مِن وَاقٍ
பாதுகாப்பவர் எவரும்

Lahum 'azaabun fil hayaatid dunyaa wa la'azaabul Aakhirati ashaaq, wa maa lahum minal laahi min-waaq

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனையுண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.

Tafseer

مَّثَلُ
தன்மை
ٱلْجَنَّةِ
சொர்க்கத்தின்
ٱلَّتِى وُعِدَ
எது/வாக்களிக்கப்பட்டார்(கள்)
ٱلْمُتَّقُونَۖ
அஞ்சியவர்கள்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
أُكُلُهَا
அதன் உணவுகள்
دَآئِمٌ
நிலையானவை
وَظِلُّهَاۚ
இன்னும் அதன் நிழல்
تِلْكَ
இதுதான்
عُقْبَى
முடிவு
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّقَوا۟ۖ
அஞ்சினர்
وَّعُقْبَى
முடிவோ
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்
ٱلنَّارُ
நரகம்தான்

Masalul Jannatil latee wu'idal muttaqoona tajree min tahtihal anhaaru ukuluhaa daaa'imunw wa zilluhaa; tilka uqbal lazeenat taqaw wa 'uqbal kafireenan Naar

இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகள் (என்றுமே) நிலையானவை. அதன் நிழலும் (அவ்வாறே நிலையானது.) இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். நிராகரிப்பவர்களின் முடிவோ நரகம்தான்!

Tafseer

وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يَفْرَحُونَ
மகிழ்வார்கள்
بِمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்கு
وَمِنَ ٱلْأَحْزَابِ
இன்னும் கூட்டங்களில்
مَن يُنكِرُ
எவர் மறுப்பார்
بَعْضَهُۥۚ
அதில் சிலவற்றை
قُلْ
கூறுவீராக
إِنَّمَآ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلَآ أُشْرِكَ
நான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்கு
إِلَيْهِ
அவன் பக்கமே
أَدْعُوا۟
அழைக்கிறேன்
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
مَـَٔابِ
என் திரும்புதல்

Wallazeena aatainaa humul Kitaaba yafrahoona bimaa unzila ilaika wa minal Ahzaabi mai yunkiru ba'dah; qul innamaa umirtu an a'budal laaha wa laaa ushrika bih; ilaihi ad'oo wa ilaihi maab

(நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி சந்தோஷப்படுவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் (அவர்களை நோக்கி,) "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணை வைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கின்றேன்; நானும் அவனிடமே செல்வேன்" என்று கூறுங்கள்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
حُكْمًا
சட்டமாக
عَرَبِيًّاۚ
அரபி மொழியில்
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீங்கள் பின்பற்றினால்
أَهْوَآءَهُم
விருப்பங்களை அவர்களுடைய
بَعْدَمَا جَآءَكَ
பின்னர் உமக்கு வந்தது
مِنَ ٱلْعِلْمِ
கல்வி
مَا لَكَ
இல்லை/உமக்கு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِن وَلِىٍّ
உதவியாளர் எவரும்
وَلَا وَاقٍ
பாதுகாவலர் இல்லை

Wa kazaalika anzalnaahu hukman 'Arabiyyaa; wa la'init taba'ta ahwaaa 'ahum ba'da maa jaaa'aka minal 'ilmi maa laka minal laahi minw waliyinw wa laa waaq

(நபியே! நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்டதிட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கி வைத்தோம். ஆகவே, (வஹீயின் மூலம்) உங்களுக்கு (திருக்குர்ஆன்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீங்கள் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ் விடத்தில் (உங்களை) பாதுகாத்துக் கொள்ளவோ, உங்களுக்கு உதவி செய்யவோ ஒருவரும் இருக்ககமாட்டார்.

Tafseer

وَلَقَدْ أَرْسَلْنَا
அனுப்பி இருக்கிறோம்
رُسُلًا
தூதர்களை
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
لَهُمْ
அவர்களுக்கு
أَزْوَٰجًا
மனைவிகளை
وَذُرِّيَّةًۚ
இன்னும் சந்ததியை(யும்)
وَمَا كَانَ
முடியாது
لِرَسُولٍ
(எந்த) தூதருக்கு
أَن يَأْتِىَ
அவர் வருவது
بِـَٔايَةٍ
அத்தாட்சியைக் கொண்டு
إِلَّا
தவிர
بِإِذْنِ
அனுமதி கொண்டே
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
لِكُلِّ
ஒவ்வொரு
أَجَلٍ
தவணைக்கும்
كِتَابٌ
ஒரு விதி

Wa laqad arsalnaa Rusulam min qablika wa ja'alnaa lahum azwaajanw wa zurriyyah; wa maa kaana lirasoolin ai yaatiya bi aayatin illaa bi iznil laah; likulli ajalin kitaab

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உங்களைப் போலவே) அவர்களுக்கும் மனைவி மக்களையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உங்களுக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அன்றி, அல்லாஹ்வின் அனுமதியின்றி யாதொரு தூதரும் எத்தகைய அத்தாட்சியும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் கற்பனை செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது.)

Tafseer

يَمْحُوا۟
அழிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا يَشَآءُ
அவன் நாடியதை
وَيُثْبِتُۖ
தரிபடுத்துகிறான்
وَعِندَهُۥٓ
இன்னும் அவனிடம்தான்
أُمُّ
தாய்
ٱلْكِتَٰبِ
புத்தகம்

Yamhul laahu maa yashaaa'u wa yusbitu wa 'indahooo ummul Kitaab

எனினும், அவன் (அதில்) நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லா காரியங்களும் தவறாது நடைபெறும்.)

Tafseer

وَإِن مَّا
நிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்கு
بَعْضَ ٱلَّذِى
சிலதை/எது
نَعِدُهُمْ
நாம் வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
أَوْ نَتَوَفَّيَنَّكَ
அல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
فَإِنَّمَا
ஆகவே, எல்லாம்
عَلَيْكَ
உம்மீது
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
وَعَلَيْنَا
நம்மீதுதான்
ٱلْحِسَابُ
விசாரணை

Wa im maa nurriyannaka ba'dal lazee na'iduhum aw nata waffayannaka fa innamaa 'alaikal balaaghu wa 'alainal hisaab

(நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீங்கள் உயிருடன் இருக்கும்போதே) உங்களுடைய கண்ணால் நீங்கள் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்!) உங்களுடைய கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பது தான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும்.

Tafseer