Innamaaa umirtu an a'buda Rabba haazihil baldatil lazee harramahaa wa lahoo kullu shai'inw wa umirtu an akoona minal muslimeen
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) மிக்க கண்ணியமுள்ள இந்நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். எல்லா பொருள்களும் அவனுக்கு உரியனவே! அன்றி, அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்.
Wa an atluwal Qur-aana famanih tadaa fa innnamaa yahtadee linafsihee wa man dalla faqul innamaaa ana minal munzireen
அன்றி, திருக்குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகின்றானோ அவன் தன் சுய நன்மைக் காகவே நேரான வழியில் செல்கின்றான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.) "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)" என்று கூறுங்கள்.
Wa qulil hamdu lillaahi sa yureekum Aayaatihee fata'ri foonahaa; wa maa Rabbuka bighaaflin 'ammaa ta'maloon
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவன் மறுமை வருவதற்குரிய) தன்னுடைய அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உங்களது இறைவன் பராமுகமாயில்லை என்று கூறுங்கள்.