Skip to main content

تُؤْمِنُونَ
நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
وَتُجَٰهِدُونَ
இன்னும் ஜிஹாது செய்யுங்கள்!
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِأَمْوَٰلِكُمْ
உங்கள் செல்வங்களாலும்
وَأَنفُسِكُمْۚ
உங்கள் உயிர்களாலும்
ذَٰلِكُمْ
அதுதான்
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிபவர்களாக

Tu'minoona billaahi wa Rasoolihee wa tujaahidoona fee sabeelil laahi bi amwaalikum wa anfusikum; zaalikum khairul lakum in kuntum ta'lamoon

(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).

Tafseer

يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
لَكُمْ
உங்களுக்கு
ذُنُوبَكُمْ
உங்கள் பாவங்களை
وَيُدْخِلْكُمْ
இன்னும் உங்களை நுழைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
وَمَسَٰكِنَ
இன்னும் தங்குமிடங்களில்
طَيِّبَةً
உயர்ந்த
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
عَدْنٍۚ
அத்ன்
ذَٰلِكَ
இதுதான்
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
மகத்தான வெற்றி

Yaghfir lakum zunoobakum wa yudkhilkum Jannaatin tajree min tahtihal anhaaru wa masaakina taiyibatan fee Jannaati 'Ad; zaalikal fawzul 'Azeem

(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.

Tafseer

وَأُخْرَىٰ
வேறு ஒன்றும்
تُحِبُّونَهَاۖ
அதை நீங்கள் விரும்புவீர்கள்
نَصْرٌ
உதவியும்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
وَفَتْحٌ
வெற்றியும்
قَرِيبٌۗ
வெகு விரைவில்
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wa ukhraa tuhibboonahaa nasrum minal laahi wa fat hun qaree; wa bashshiril mu 'mineen

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதனைக் கொண்டு) நம்பிக்கை யாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
كُونُوٓا۟
நீங்கள் ஆகிவிடுங்கள்
أَنصَارَ
உதவியாளர்களாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَمَا قَالَ
கூறியதைப் போன்று
عِيسَى
ஈஸா
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
لِلْحَوَارِيِّۦنَ
உற்ற தோழர்களை நோக்கி
مَنْ
யார்
أَنصَارِىٓ
எனது உதவியாளர்கள்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்காக
قَالَ
கூறினார்(கள்)
ٱلْحَوَارِيُّونَ
உற்றதோழர்கள்
نَحْنُ
நாங்கள்
أَنصَارُ
உதவி செய்பவர்கள்
ٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு
فَـَٔامَنَت
ஆகவே நம்பிக்கை கொண்டது
طَّآئِفَةٌ
ஒரு பிரிவு
مِّنۢ بَنِىٓ
இஸ்ரவேலர்களில்
وَكَفَرَت
இன்னும் நிராகரித்தது
طَّآئِفَةٌۖ
ஒரு பிரிவு
فَأَيَّدْنَا
ஆகவே, நாம் பலப்படுத்தினோம்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
عَلَىٰ عَدُوِّهِمْ
அவர்களின் பகைவர்களுக்கு எதிராக
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டார்கள்
ظَٰهِرِينَ
வெற்றியாளர்களாக

Yaaa ayyuhal lazeena aamaanoo koonooo ansaaral laahi kamaa qaala 'Eesab-nu-Maryama lil Hawaariyyeena man ansaareee ilal laah; qaalal Hawaariyyoona nahnu ansaa rul laahi fa aamanat taaa'ifatum mim Bannee Israaa'eela wa kafarat taaa'ifatun fa ayyadnal lazeena aammanoo 'alaa 'aduwwihim fa asbahoo zaahireen

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன்னுடைய தோழர்களை நோக்கி "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" என்று கேட்ட சமயத்தில், "நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்" என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர் தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர் களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றிபெற்றவர்களாகி விட்டார்கள்.

Tafseer