Skip to main content

وَقُل
கூறுவீராக
لِّلَّذِينَ
எவர்களுக்கு
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
ٱعْمَلُوا۟
நீங்கள் செய்யுங்கள்
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் போக்கில்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
عَٰمِلُونَ
செய்பவர்கள், செய்வோம்

Wa qul lillazeena laa yu'minoona' maloo 'alaa makaanatikum innaa 'aamiloon

நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம்.

Tafseer

وَٱنتَظِرُوٓا۟
எதிர்பாருங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مُنتَظِرُونَ
எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்

Wantaziroo innaa mun taziroon

நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர்பார்த்திருக்கிறோம்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
غَيْبُ
மறைவானவை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَإِلَيْهِ
அவனிடமே
يُرْجَعُ
திருப்பப்படும்
ٱلْأَمْرُ
காரியங்கள்
كُلُّهُۥ
அவை எல்லாம்
فَٱعْبُدْهُ
ஆகவே, அவனை வணங்குவீராக
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
عَلَيْهِۚ
அவன் மீதே
وَمَا
இல்லை
رَبُّكَ
உம் இறைவன்
بِغَٰفِلٍ
கண்காணிக்காதவனாக
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Wa lillaahi ghaibus samaawaati wal ardi wa ilaihi yurja'ul amru kulluhoo fa'bu-dhu wa tawakkal 'alaih; wa maa Rabbuka bighaafilin 'ammaa ta'maloon

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனையே நம்புங்கள். உங்கள் இறைவன் நீங்கள் செய்பவைகளைப் பற்றி பராமுகமாயில்லை."

Tafseer