Skip to main content

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱلْفُلْكَ
கப்பல்
تَجْرِى
ஓடுகின்றன
فِى ٱلْبَحْرِ
கடலில்
بِنِعْمَتِ
அருளினால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لِيُرِيَكُم
அவன் உங்களுக்கு காண்பிப்பதற்காக
مِّنْ ءَايَٰتِهِۦٓۚ
தனது அத்தாட்சிகளை
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
لِّكُلِّ
எல்லோருக்கும்
صَبَّارٍ
பெரிய பொறுமையாளர்
شَكُورٍ
அதிகம் நன்றி செலுத்துபவர்

Alam tara annal fulka tajree fil bahri bini'matil laahi li yuriyakum min Aayaatih; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor

அல்லாஹ்வினுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَإِذَا غَشِيَهُم
அவர்களை சூழ்ந்துகொண்டால்
مَّوْجٌ
ஓர் அலை
كَٱلظُّلَلِ
நிழல்களைப் போன்ற
دَعَوُا۟
அழைக்கின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
لَهُ
அவனுக்கு மட்டும்
ٱلدِّينَ
மார்க்கத்தை
فَلَمَّا نَجَّىٰهُمْ
அவர்களை அவன் காப்பாற்றிய போது
إِلَى ٱلْبَرِّ
கரைக்கு
فَمِنْهُم
அவர்களில் சிலர்
مُّقْتَصِدٌۚ
நல்லவர்களாக
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளை
إِلَّا كُلُّ
தவிர/எல்லோரையும்
خَتَّارٍ
வாக்குறுதிகளை மீறக்கூடியவர்(கள்)
كَفُورٍ
நன்றிகெட்டவர்(கள்)

Wa izaa ghashiyahum mawjun kazzulali da'a-wul laaha mukhliseena lahud deena fa lammaa najjaahum ilal barri faminhum muqtasid; wa maa yajhadu bi Aayaatinaa illaa kullu khattaarin kafoor

(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! நாம் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தாம் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலான வர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ٱتَّقُوا۟
பயந்துகொள்ளுங்கள்!
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
وَٱخْشَوْا۟
இன்னும் பயந்துகொள்ளுங்கள்
يَوْمًا
ஒரு நாளை
لَّا يَجْزِى
தடுக்கமாட்டார்
وَالِدٌ
தந்தை
عَن وَلَدِهِۦ
தன் மகனை விட்டு
وَلَا مَوْلُودٌ
பிள்ளையும் இல்லை
هُوَ
அவர்
جَازٍ
தடுக்கக்கூடியவராக
عَن وَالِدِهِۦ
தனது தகப்பனை விட்டு
شَيْـًٔاۚ إِنَّ
எதையும்
وَعْدَ
நிச்சயமாக வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّۖ
உண்மையானது
فَلَا تَغُرَّنَّكُمُ
ஆகவே, உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை
وَلَا يَغُرَّنَّكُم
இன்னும் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
ٱلْغَرُورُ
ஏமாற்றக் கூடியவன்

Yaaa ayyuhan naasuttaqoo Rabbakum wakhshaw Yawmal laa yajzee waalidun 'anw waladihee wa laa mawloodun huwa jaazin 'anw waalidihee shai'aa; innaa wa'dal laahi haqqun falaa taghurran nakumul hayaatud dunyaa wa laa yaghur rannakum billaahil gharoon

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவ மாட்டான்; பிள்ளையும் தந்தைக்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டான். ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் படி நிர்ப்பந்திக்கக்கூடிய நாளாகும். நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عِندَهُۥ
அவனிடம்தான்
عِلْمُ
அறிவு
ٱلسَّاعَةِ
மறுமையின்
وَيُنَزِّلُ
இன்னும் அவன்தான் இறக்குகின்றான்
ٱلْغَيْثَ
மழையை
وَيَعْلَمُ
இன்னும் அவன் அறிகின்றான்
مَا فِى
கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை
وَمَا تَدْرِى
இன்னும் அறியாது
نَفْسٌ
ஓர் ஆன்மா
مَّاذَا
என்ன
تَكْسِبُ
அது செய்யும்
غَدًاۖ
நாளை
وَمَا تَدْرِى
இன்னும் அறியாது
نَفْسٌۢ
ஓர் ஆன்மா
بِأَىِّ
எந்த
أَرْضٍ
பூமியில்
تَمُوتُۚ
அது மரணிக்கும்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்

Innal laaha 'indahoo 'ilmus saa'ati wa yunazzilul ghaisa wa ya'lamu maa fil arhaami wa maa tadree nafsum maazaa takisbu ghadaa; wa maa tadree nafsum bi ayyi ardin tamoot; innal laaha 'Aleemun Khabeer

நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவைகளை) நன்கறிந்தவனும் தெரிந்தவனுமாக இருக்கிறான்.

Tafseer