Skip to main content

وَٱسْتَمِعْ
நீர் செவியுறுவீராக!
يَوْمَ
நாளில்
يُنَادِ
அழைக்கின்ற
ٱلْمُنَادِ
அழைப்பவர்
مِن مَّكَانٍ
ஓர் இடத்தில் இருந்து
قَرِيبٍ
சமீபமான(து)

Wastami' yawma yunaa dil munaadi mim makaanin qareeb

(நபியே!) நீங்கள் செவிமடுத்துக் கேளுங்கள். (சமாதிகளின்) சமீபத்திலிருந்து (கொண்டு "மரணித்தவர்களே! எழும்புங்கள்" என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில்,

Tafseer

يَوْمَ
நாளில்
يَسْمَعُونَ
அவர்கள் செவியுறுகின்ற
ٱلصَّيْحَةَ
அந்த சப்தத்தை
بِٱلْحَقِّۚ
உண்மையில்
ذَٰلِكَ
அதுதான்
يَوْمُ
நாளாகும்
ٱلْخُرُوجِ
வெளியேறுகின்ற

Yawma yasmaoonas sai hata bilhaqq zaalika yawmul khurooj

(மலக்குகள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்.

Tafseer

إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
نُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றோம்
وَنُمِيتُ
இன்னும் மரணிக்க வைக்கின்றோம்
وَإِلَيْنَا
இன்னும் நம் பக்கமே இருக்கின்றது
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Innaa Nahnu nuhyee wa numeetu wa ilainal maseer

நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கின்றோம்; நாம்தான் மரணிக்கச் செய்கின்றோம்; நம்மிடமே அனைவரும் வர வேண்டிய திருக்கின்றது.

Tafseer

يَوْمَ
நாளில்
تَشَقَّقُ ٱلْأَرْضُ
பூமி பிளந்துவிடும்
عَنْهُمْ
அவர்களை விட்டும்
سِرَاعًاۚ
அதிவிரைவாக வெளியேறுகின்ற
ذَٰلِكَ
இது
حَشْرٌ
ஒன்றுதிரட்டல்தான்
عَلَيْنَا
நமக்கு
يَسِيرٌ
இலகுவான

Yawma tashaqqaqul ardu 'anhum siraa'aa; zaalika hashrun 'alainaa yaseer

(மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டும் விலகும் நாளையும் (நினைவு கூருங்கள்.) அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.

Tafseer

نَّحْنُ أَعْلَمُ
நாம் அதிகம் அறிந்தவர்கள்
بِمَا يَقُولُونَۖ
அவர்கள் கூறுகின்றவற்றை
وَمَآ أَنتَ
நீ இல்லை
عَلَيْهِم
அவர்களை
بِجَبَّارٍۖ
அடக்கக்கூடியவராக
فَذَكِّرْ
ஆகவே, அறிவுரை வழங்குவீராக!
بِٱلْقُرْءَانِ
இந்த குர்ஆன் மூலமாக
مَن يَخَافُ
பயப்படுகின்றவருக்கு
وَعِيدِ
எனது எச்சரிக்கையை

Nahnu a'lamu bimaa yaqooloona wa maaa anta 'alihim bijabbaarin fazakkir bil quraani many yakhaafu wa'eed

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. (நம்முடைய) வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு இந்தக் குர்ஆனைக் கொண்டு நீங்கள் நல்லுபதேசம் செய்வீராக!

Tafseer