Skip to main content
bismillah

قٓۚ
காஃப்
وَٱلْقُرْءَانِ
குர்ஆன் மீது சத்தியமாக!
ٱلْمَجِيدِ
கீர்த்திமிக்க(து)

Qaaaf; wal Qur aanil Majeed

காஃப். (நபியே!) மிக்க மேலான இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக!

Tafseer

بَلْ
மாறாக
عَجِبُوٓا۟
ஆச்சரியப்பட்டனர்
أَن
வந்ததால்
جَآءَهُم
அவர்களிடம்
مُّنذِرٌ
ஓர் எச்சரிப்பாளர்
مِّنْهُمْ
அவர்களில் இருந்தே
فَقَالَ
ஆகவே, கூறினர்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
هَٰذَا
இது
شَىْءٌ
ஒரு விஷயம்
عَجِيبٌ
மிக ஆச்சரியமான

Bal 'ajibooo an jaa'ahum munzirum minhum faqaalal kaafiroona haazaa shai'un 'ajeeb

(நீங்கள் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்). ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதராக (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் இருந்தே நீங்கள் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, நிராகரிப்பவர்கள் "இது மிக அற்புதமான விஷயமென்று" கூறுகின்றனர்.

Tafseer

أَءِذَا مِتْنَا
நாங்கள் இறந்துவிட்டாலுமா
وَكُنَّا
இன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமா
تُرَابًاۖ
மண்ணாக
ذَٰلِكَ
அது
رَجْعٌۢ
மீட்சியாகும்
بَعِيدٌ
தூரமான(து)

'A-izaa mitnaa wa kunnaa turaaban zaalika raj'um ba'eed

(அன்றி, "இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீள வைக்கப் படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை" என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

قَدْ
திட்டமாக
عَلِمْنَا
நாம் அறிவோம்
مَا تَنقُصُ
குறைப்பதை
ٱلْأَرْضُ
பூமி
مِنْهُمْۖ
அவர்களில்
وَعِندَنَا
நம்மிடம் இருக்கிறது.
كِتَٰبٌ
பதிவு நூல்
حَفِيظٌۢ
பாதுகாக்கக்கூடிய(து)

Qad 'alimnaa maa tanqu-sul-ardu minhum wa 'indanaa Kitaabun Hafeez

(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பி விடுவோம்.) அன்றி, (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)

Tafseer

بَلْ
மாறாக
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
بِٱلْحَقِّ
உண்மையை
لَمَّا
அது வந்த போது
جَآءَهُمْ
அவர்களிடம்
فَهُمْ
அவர்கள் இருக்கின்றனர்
فِىٓ أَمْرٍ
ஒரு விஷயத்தில்
مَّرِيجٍ
குழப்பமான

Bal kazzaboo bilhaqqi lammaa jaaa'ahum fahum feee amrim mareej

இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.

Tafseer

أَفَلَمْ يَنظُرُوٓا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
إِلَى ٱلسَّمَآءِ
வானத்தை
فَوْقَهُمْ
தங்களுக்கு மேல் உள்ள
كَيْفَ بَنَيْنَٰهَا
நாம் அதை எப்படி படைத்தோம்?
وَزَيَّنَّٰهَا
இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?
وَمَا لَهَا
அதில் இல்லை
مِن فُرُوجٍ
பிளவுகள்

Afalam yanzurooo ilas samaaa'i fawqahum kaifa banainaahaa wa zaiyannaahaa wa maa lahaa min furooj

தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதனை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதனை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம். அதில் எவ்வித வெடிப்புமில்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!)

Tafseer

وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
مَدَدْنَٰهَا
நாம் அதை விரித்தோம்
وَأَلْقَيْنَا فِيهَا
இன்னும் அதில் அமைத்தோம்
رَوَٰسِىَ
பெரிய மலைகளை
وَأَنۢبَتْنَا
இன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம்
فِيهَا
அதில்
مِن كُلِّ
எல்லா வகையான
بَهِيجٍ
அழகான

Wal arda madadnaahaa wa alqainaa feehaa rawaasiya wa ambatnaa feehaa min kulli zawjim baheej

அன்றி, நாமே பூமியை விரித்து, அதில் ஸ்திரமான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்.

Tafseer

تَبْصِرَةً
உற்று நோக்குவதற்காக(வும்)
وَذِكْرَىٰ
படிப்பினை பெறுவதற்காகவும்
لِكُلِّ عَبْدٍ
எல்லா அடியார்களுக்கும்
مُّنِيبٍ
திரும்பக்கூடிய(வர்)

Tabsiratanw wa zikraa likulli 'abdim muneeb

(இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கின்றது).

Tafseer

وَنَزَّلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
நீரை
مُّبَٰرَكًا
அருள் நிறைந்த(து)
فَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
بِهِۦ
அதன் மூலம்
جَنَّٰتٍ
தோட்டங்களை(யும்)
وَحَبَّ
தானியங்களையும்
ٱلْحَصِيدِ
அறுவடை செய்யப்படும்

Wa nazzalnaa minas samaaa'i maaa'am mubaarakan fa ambatnaa bihee jannaatinw wa habbal haseed

மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதனைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கின்றோம்.

Tafseer

وَٱلنَّخْلَ
இன்னும் பேரித்த மரங்களையும்
بَاسِقَٰتٍ
உயரமான(வைகள்)
لَّهَا
அவற்றில்
طَلْعٌ
குலைகள் இருக்கின்றன
نَّضِيدٌ
அடர்த்தியான(து)

Wannakhla baasiqaatil laha tal'un nadeed

அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து),

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து ஃகாஃப்
القرآن الكريم:ق
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Qaf
ஸூரா:50
வசனம்:45
Total Words:357
Total Characters:1494
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:34
Starting from verse:4630